×

'பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்': டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்..!!

சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,

“பொய்யும் ஏமாற்றும்
காசியோடு போகும்”

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம்.  

11-11-2022 அறிவிப்பு.

தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை என காசியில் நடைபெற்ற ஒன்றிய கல்வித்துறையின்  நிகழ்வில் பிரதமர் பேசுவார்.

இந்தியை காப்பதே எங்களின் வேலை என அதே கல்வித்துறை டெல்லியிலிருந்து உத்தரவு வெளியிடும்.

டெல்லி மத்திய பல்கலைக் கழகத்தில் இந்தி இல்லாவிட்டால்  இளநிலைப் பட்டம் இல்லை.

இது தான் ஒன்றிய பாஜக அரசு.

“பொய்யும் ஏமாற்றும்
காசியோடு போகும்”
என்ற பழமொழி பொருத்தமானதே.

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.


Tags : Cashi ,Madurai ,Delhi University GP ,SV Venkatesan , Delhi University, Hindi Language Examination, Madurai M.P. S. Venkatesan
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை