நளினி விடுதலை வழக்கு நவ.11க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து, ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம்’ என தமிழக அரசும் தனது தரப்பில் பதில் மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கான உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்தனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: