×

திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு 5 நாள் இன்சுலின்

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து 5 நாள் இன்சுலின் வழங்குமாறு எய்ம்ஸ் மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. திகார் சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவாலுககு திங்களன்று மாலை சர்க்கரை அளவு 217 ஆக உயர்ந்தபோது அவருக்கு முதல் டோஸ் இன்சுலின் வழங்கப்பட்டது. இது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு இன்சுலின் மருந்தின் அளவைத் தொடர மருத்துவக்குழு அறிவுறுத்தியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு 5 நாள் இன்சுலின் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Tihar Jail ,New Delhi ,AIIMS ,Chief Minister ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...