×

ஐசிஎம்ஆர் வழிமுறைகளின்படி விதிமுறை மீறல் மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ்: தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: ஐசிஎம்ஆர் வழிமுறைகளின்படி விதிமுறைகளை மீறிய மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை அமைந்தக்கரையில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மையத்தில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாடகைத்தாய் சிகிச்சை முறை வழங்குவதாக புகார் வரப்பெற்றது. மேலும் கடந்த 16ம் தேதி வாடகைத் தாய்களை உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக செய்தி வெளியானது.

அந்த புகாரை தொடர்ந்து மருத்துவத்துறை சார்பில் உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இக்குழுவானது கடந்த 16ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட சென்னை அமைந்தக்கரையில் உள்ள புகாரில் குறிப்பிட்ட முகவரியில் நேரடி விசாரணை மேற்கொண்டது. இம்முகவரியில் கர்ப்பிணி பெண்கள் வாடகைத் தாயாக செயல்பட்ட பெண்கள் குழந்தை பிறப்பிற்கு பிந்தைய பராமரிப்பில் இருந்ததும், இவர்கள் சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.

தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் தொழில் நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021 மற்றும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம், 2021 ஆகிய புதிய சட்டங்கள் இந்திய அரசிதழில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியிடப்பட்டது. வாடகை தாயாக செயல்பட்ட அனைத்து தாய்மார்களின் வயது 25 வயதுக்கு மேல் உள்ளது மற்றும் அனைத்து தாய்மார்களும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் அனைத்து வாடகை தாய்மார்களும் முதல் முறையாக வாடகை தாயாக செயல்படுவது, விசாரணையில் இவ்வாடகைத் தாய்கள் தம்பதியருக்கு உறவினராக இல்லை என்பதும், முந்தைய ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் விசாரணையில் வாடகைத் தாயாக செயல்பட்டு வரும் தாய்மார்களுக்கு அவசிய செலவினத்திற்கு பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தியது. ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி மற்றும் செயற்கை கருத்தரித்தல் தொழில் நுட்ப சட்டத்தின் படி மருத்துவமனை நிர்வாகம் நேரடியாக பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது. வாடகை தாயாக செயல்பட்டு வரும் தாய்மார்களிடம் ஒப்புதல் படிவம் அவரவர் தாய்மொழியில் பெறப்படவில்லை. வாடகைத்தாயாக செயல்பட்டு வரும் தாய்மார்களுக்கு காப்பீடு திட்டம் ஏதும் மருத்துவமனையில் செயல்படுத்தப் படவில்லை. இந்த இனங்களில், வாடகைத்தாயாக ஒப்பந்தம் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் போடப்பட்டுள்ளது.

பழைய வழிமுறைகளின்படி அவசிய செலவினங்களுக்கு மட்டும் பணம் வாடகைத்தாய்களுக்கு தரும் நடைமுறைக்கு வழிவகை இருந்தது. எனினும் புதிய வாடகைத்தாய் சட்ட பிரிவின்படி ஏற்கனவே வாடகைத் தாயாக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் தங்களது 10 மாத கர்ப்ப காலத்தினை தொடரலாம். ஐசிஎம்ஆர் வழிமுறைகளின்படி மேற்கொண்ட விதிமுறை மீறல்களுக்காக மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய காப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்  கீழ் முறையான மருத்துவமனைகள்  பதிவினை பெற வேண்டும். மேலும் நவம்பர் 25ம் தேதிக்கு  பின்னர் மேற்கொள்ளப்படும் வாடகைத் தாய் நடைமுறைகளுக்கு செயற்கை கருத்தரித்தல் தொழில் நுட்ப சட்டம், 2021 மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டம், 2021 மற்றும் உரிய விதிகள் முற்றிலும் பொருந்தும். வாடகைத் தாயாக செயல்பட்டு வரும் தாய்மார்களின் செலவுக்கு பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தியது. ஆனால், விதிமுறைபடி மருத்துவமனை நிர்வாகம் நேரடியாக பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது.

Tags : Tamilnadu Health Department , Violation of regulations as per ICMR guidelines Notice to hospital seeking explanation: Tamil Nadu Health Department Information
× RELATED கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை...