×

தீபாவளி பண்டிகையையொட்டி விராலிமலையில் களை கட்டிய சந்தை ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதியில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை பக்கத்து மாநிலமான புதுவையில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும்.

இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சி கடைக்காரர்கள் கூறுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். காலை 7.30 மணி நிலவரப்படி ஒரு கோடியையும் தாண்டி ஆடுகள் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags : Viralimalai ,Diwali Feast , Weed market in Viralimalai on the occasion of Diwali sells goats for Rs 1 crore: Farmers happy
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...