×
Saravana Stores

மேலும் 2 ஊழல் வழக்கில் தீர்ப்பு சூகி சிறை தண்டனை 26 ஆண்டாக நீட்டிப்பு

பாங்காங்: மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அரசு ஆலோசகராக பதவியேற்றார். எனினும் தேர்தல் மோசடி என கூறி கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 20201ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆங் சாங் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது தேர்தல் மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு, கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியது, நாட்டின் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறுதல், தேசதுரோகம், தேர்தல் மோசடி மற்றும் 5 ஊழல் வழக்குகளில் அவருக்கு  ஏற்கனவே 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 2 ஊழல் வழக்குகளில் அவருக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மேலும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Suu Kyi , Suu Kyi's prison sentence extended to 26 years in 2 more corruption cases
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்