ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் 58வது ஆண்டு கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் எதிரில் உள்ள பிரமிப்பூட்டும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 58ம் ஆண்டு கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பச்சையப்பாஸ் குழும தலைவர் சுந்தர் கணேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கின்றன.

தங்க நகைகளுக்கான சேதாரம் 3.99 சதவீதம் முதல் ஆரம்பம், வைரங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி, சிறப்பு வைர நெக்லஸ் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் முதல் கிடைக்கும். மேலும் அதிக பலன்களுடன் பழைய தங்க நகைகளை புத்தம் புதிய தங்க நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களின் மிகப்பெரிய கலெக்ஷன்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு வந்துள்ளன. விழாவில் அலுவலக மேலாளர்  ஹரி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: