சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை (56) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 11ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது திடிரென்று கோதை மயங்கி விழுந்துள்ளார். மூளையில் ரத்தம் உறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட கோதை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோதை நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

*முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி 2019 முதல் கல்லூரி முதல்வராகவும்   பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: