×

உபி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஒத்திகையால் 22 பேர் இறக்கவில்லை: விசாரணைக் குழு அறிக்கை

ஆக்ரா:  உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26, 27 தேதிகளில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆக்சிஜன் இல்லாமல் தாக்கு பிடிக்கும் நோயாளிகள் யார் என்பதை கண்டறிவதற்காக 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தும் ஒத்திகை செய்யப்பட்டது. அதில்தான், 22 நோயாளிகள் இறந்தனர்,’ என வீடியோவில் கூறியிருந்தார்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய 4 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை ஆக்ரா மாவட்ட ஆட்சியர்  பிரபு என். சிங் நேற்று வெளியிட்டார். அதில், ‘உயிரிழந்த 22 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்துள்ளது. நோயாளிகளின் உறவினர்களும் ஆக்சிஜன் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது என்பதற்கும், வேண்டும் என்றே நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை’ என கூறப்பட்டுள்ளது.  …

The post உபி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஒத்திகையால் 22 பேர் இறக்கவில்லை: விசாரணைக் குழு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ubi private hospital ,Agra ,Agra, Uttar Pradesh ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED நீ திரும்ப, திரும்ப சொல்ற…...