ராமேஸ்வரம் தீவில் உள்ள டாஸ்மாக்கை மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை: ராமேஸ்வரம் தீவில் உள்ள மதுக்கடையை மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில், மின்சார துறை சம்பந்தமான கோரிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்று அளித்தனர். அப்போது, பேரமைப்பின் பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, இளம் தொழில்முனைவோர் அமைப்பாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்: ராமேஸ்வரம் தீவில் ஏற்கனவே மதுபானக் கடைகள் இயங்க தடை உள்ளது. ஆனால், பாம்பன் பகுதியில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபான கடையை மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்து பொதுமக்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி, தாராபுரம் ரோட்டின் வடபுறம் உள்ள கடைகளில் பின்புறமுள்ள 10 அடி அகல சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அதை ஒட்டியுள்ள 5 அடி கழிவுநீர் கால்வாயை அடைத்து வைத்துள்ளதை தூர்வாரி, செம்மைப்படுத்தி, கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: