×

தொலைதூர கல்வி பட்டமும் கல்லூரி பட்டமும் இனி சமம்: யுஜிசி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: படிப்பை பாதியில் நிறுத்தி விட்டவர்கள், வேலை செய்து கொண்டே படிக்க நினைப்பவர்களுக்கு திறந்தவெளி, தொலைதுார கல்வி முறைகள், ஆன்லைன் கல்விகள் உதவியாக இருக்கின்றன. ஆனால், இவற்றால் வழங்கப்படும் பட்டங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. வேலை வாய்ப்பில் இந்த பட்டங்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவது இல்லை. இனிமேல், இந்த குறை ஏற்படாத நிலை உருவாகி இருக்கிறது. பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று கூறுகையில், ‘‘திறந்த வெளி மற்றும் தொலைதுார கல்வி மையங்கள் அல்லது உயர் கல்வி மையங்களால் வழங்கப்படும்  இளங்கலை பட்டப்படிப்பு , பட்டமேற்படிப்பு, பட்ட மேற்படிப்பு டிப்ளமோ பட்டங்கள் தொடர்பாக  கடந்த 2014ம் ஆண்டு யுஜிசியின்  விதிமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் திறந்தவெளி, தொலைதுார கல்வி மையங்கள், ஆன்லைன் கல்வி அளிக்கும் உயர் கல்வி மையங்கள் வழங்கும் பட்டங்கள், பட்ட மேற்படிப்பு  டிப்ளமோக்கள் போன்றவை முறையான படிப்புக்கு இணையாக கருதப்படும். யுஜிசியின்  விதிமுறைகள் 22ன்படி ( திறந்தவெளி, தொலைதுார பயிற்சி திட்டங்கள், ஆன்லைன் திட்டங்கள்) இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Education ,UGC , Distance Education Degree and College Degree Now Equal: UGC Action Notification
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...