×

3 விமானங்கள், பார்சல்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1.14 கோடி தங்கம் பறிமுதல்; இருவர் கைது

மீனம்பாக்கம்:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவருடைய உள்ளாடைக்குள் ரூ.59.35 லட்சம் மதிப்புடைய 1.310 கிலோ தங்க பசை இருந்தது. அதை பறிமுதல் செய்து, இலங்கை பயணியை கைது செய்து செய்தனர். அதே விமானம் மீண்டும் டெல்லி செல்லும் வகையில், ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தியபோது, ஒரு சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சலை கைப்பற்றினார். அந்த பார்சலில் ரூ.12.86 லட்சம் மதிப்புடைய 286 கிராம் தங்கப்பசை இருந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.  

இதற்கிடையே இலங்கையிலிருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையை சேர்ந்த 26 வயது ஆண் பயணியின் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.17.59 லட்சம் மதிப்புடைய 395 கிராம் தங்கப்பசையை கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். இதையடுத்து இலங்கையில் இருந்து மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக, ஐதராபாத் புறப்பட தயாராகி உள்ளது. அதை விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தினார். அப்போது விமானத்திற்குள் ஒரு சீட்டுக்கு அடியில் மறைத்துவைத்திருந்த ரூ.24.72 லட்சம் மதிப்புடைய 540 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினர்.

இதேபோல், சென்னை விமான நிலையத்தில் உள்ள பாரின் போஸ்ட் ஆபீஸ்க்கு சீனாவில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள தென்காசி முகவரிக்கு 2 பார்சல்களும், இங்கிலாந்தில் இருந்து சென்னை முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன. அந்த பார்சல்களில் பரிசுப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு துண்டுகளாக 31 தங்க துண்டுகள் இருந்தன. அதன் எடை 420 கிராம். அதன்  சர்வதேச மதிப்பு ரூ.22.49 லட்சம். சுங்க அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து பார்சல் அனுப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Seizure of Rs.1.14 crore worth of gold smuggled in 3 flights, parcels; Two arrested
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...