×

சோதனைகளை வென்று சாதனை படைத்த மில்கா சிங்-கின் வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.’பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர்.மில்கா சிங் நேற்று (ஜூன் 19) நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 91. கொரோனாவிலிருந்து மீண்டவர், கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் உயிரிழந்தார். அவரது மறைவு தடகள வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மில்கா சிங் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவரும் ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங்கின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்….

The post சோதனைகளை வென்று சாதனை படைத்த மில்கா சிங்-கின் வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Milka Singh-Kin ,Stalin ,MILKA SINGH ,
× RELATED காலை உணவு திட்டம் மூலம் பயன்பெறும்...