×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக் வெளியானது; படப்பிடிப்பு துவக்கம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த என 3 படங்களில் சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்து பணியாற்றினர்.

இந்நிலையில் 4வது முறையாக ஜெயிலர் படம் மூலம் ரஜினியும் சன் பிக்சர்ஸும் இணைந்து பணியாற்ற உள்ளனர். தொடர்ந்து 3 வெற்றி படங்களுக்கு பிறகு 4வது முறையாக இணைவதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கும் படம் என்பதாலும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரஜினியுடன் நெல்சன் முதல்முறையாக இந்த படத்தில் இணைகிறார். பீஸ்ட் படத்துக்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸுடன் நெல்சன் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் தாடியுடன் காணப்படுகிறார். அவர் ஸ்டைலாக நின்றிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று முதல் பட ஷூட்டிங் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெயிலர் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


Tags : Rajini ,Sun Pictures , Rajinikanth's Jailer first look released by Sun Pictures; Start of shooting
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...