×

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியீடு..!!

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பேட்டை, தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களை தொடர்ந்து 5வது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 171வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தில் ரன்பீர் சிங், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவும் நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ரஜினியின் 171வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,CHENNAI ,Lokesh Kanagaraj ,Sun Pictures ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...