×

நாடுகாணி- கீழ்நாடுகாணி இடையே ஏற்பட்ட பள்ளங்களை சீரமைத்த கிராம மக்கள்

கூடலூர் :கூடலூரில் இருந்து நாடுகாணி, கீழ்நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அண்ணாநகர் நாடுகாணி இடையே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வரும் நிலையில் உள்ளூர் மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் ஏற்பட்ட  பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் மக்களே முன்வந்து சாலையில் உள்ள பள்ளங்களில் கற்கள், மண் கொண்டு நிரப்பி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மழைக்காலம் துவங்கும் முன்பே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, பருவமழை துவங்கி உள்ளதால் பள்ளங்கள் மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. ஆகவே, நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை தற்காலிகாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post நாடுகாணி- கீழ்நாடுகாணி இடையே ஏற்பட்ட பள்ளங்களை சீரமைத்த கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Nadukhani ,Lower Nadukhani ,Kudalur ,Kilinnadukani ,Annanagar Nadukhani ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்