×

பேரணாம்பட்டில் எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்தது

பேரணாம்பட்டு: ேவலூர் மாவட்டம், பேரணாம்பட்டு திருவிக நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேலூரில் உள்ள ஷோரூமில் எெலக்ட்ரிக் பைக் வாங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பிரபாகரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வௌியே நிறுத்தி வைத்திருந்த எெலக்ட்ரிக் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மூச்சு திணறலில் அவதிப்பட்ட அவர் வெளியில் வந்து பார்த்தபோது எெலக்ட்ரிக் பைக் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார்.

Tags : Peranambat , Peranampatu, electric bike, fire accident
× RELATED (வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர்...