புழல் சிறைச்சாலை அருகில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் : சிறைத்துறை ஏற்பாடு

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேலும் ஒரு பெட்ரோல் பங்க் திறக்க, சிறைத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். புழல் மத்திய சிறைச்சாலை காவலர் குடியிருப்பு அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கடந்த 2018ம் ஆண்டு தமிழக சிறைத்துறை சார்பில், பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. இதில், சிறையில் தண்டனை பெற்ற நன்னடத்தை கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், புழல் சிறைத்துறை சார்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு, புழல் - அம்பத்தூர் சாலை சிறை அதிகாரிகள் வளாகம் அருகில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புழல் சிறை துறையினர் செய்து வருகின்றனர். இதுகுறித்து, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த பெட்ரோல் பங்க் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

Related Stories: