×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 17ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை:  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தல் பொருள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dizhagam ,MLA ,Chennai Anna Nawalayam ,CM K. Stalin , DMK MLAs meeting on 17th at Anna Vidyalaya, Chennai: Chief Minister M.K.Stalin will lead the meeting
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு