×

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!


சென்னை : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 34 ரயில்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

*ரயில் எண் 06405 / 06409 கொண்ட திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி),

*ரயில் எண் 06663 / 06664 கொண்ட மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி),

*ரயில் எண் 06681 / 06658 திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி),

*ரயில் எண் 06684 / 06687 கொண்ட செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) ஆகியவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.


*ரயில் எண் 06809 / 06810 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி),
*ரயில் எண் 06611 / 06612 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி)
ஆகியவை ஜூலை 9ம் தேதி முதல் இயக்கப்படும்.


*ரயில் எண் 06401 / 06402 கொண்ட அரக்கோணம் - கடப்பா - அரக்கோணம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) வரும் ஜூலை 27ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

*ரயில் எண் 06831 / 06838 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 18ம் தேதி முதல் இயக்கப்படும்.

* ரயில் எண் 06802 / 06803 கொண்ட கோவை - சேலம் - கோவை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்),

ரயில் எண் 06881 / 06882 கொண்ட திருச்சி - கரூர் - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்),

*ரயில் எண் 06821 / 06822 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனி தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 27ம் தேதி முதல் இயக்கப்படும்.

*ரயில் எண் 16847 / 16848 கொண்ட மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஜூலை 11ஆம் தேதியும், திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12ம் தேதி இயக்கப்படவுள்ளது.

Tags : Southern Railways ,Tamil Nadu , Tamil Nadu, Rail, Services, Southern Railway
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...