×

காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் சாவு: உத்தரப்பிரதேசத்தில் நடந்த பரிதாபம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேசத்தில் மாரடைப்பால் காலமானார்.காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப் பகுதி குமாரசாமி நகரை சேர்ந்தவர் அ.ரமேஷ் (58). இவர், உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் பணியாற்றிய இடத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து அவரது உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இன்று காலையில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. இவருக்கு கீதாலெட்சுமி (52) என்ற மனைவியும், வினோத்குமார் (28) என்ற மகனும் உள்ளனர்.



Tags : Kanjipuram ,Uttar Pradesh , Death of Border Security Force soldier from Kanchipuram: Tragedy in Uttar Pradesh
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...