×

கார் மீது லாரி பயங்கர மோதல்: தாய், மகன் உள்பட 4 பேர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி தாய், மகன் உள்பட 4 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (46). அரிசி ஆலை ஊழியர். இவரது மனைவி வேதவள்ளி (40). இவர்களது மகன்கள் கிஷோர் (12), திவாகர் (6). கள்ளக்குறிச்சி தீர்த்தாலுநகர், ஆதம்ஸ் பள்ளி அருகே வசித்து வருபவர் கதிரவன் (45). பெங்களூரு ஐடி கம்பெனி ஊழியர். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வந்தவர் இங்கிருந்தே வேலை பார்த்து வருகிறார். கண்ணனும், கதிரவனும் நண்பர்கள்.

இந்நிலையில் கண்ணன், கதிரவன் மற்றும் கதிரவனின் தாய் தமிழரசி (65), தம்பி கார்முகில் (40), மகன் சந்திரவதனன் (12), கார்முகில் மகன் லிங்கநேத்திரன் (8), கண்ணன் மனைவி வேதவள்ளி, 2 குழந்தைகள் ஆகிய 9 பேர் நேற்று காலை 6 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட காரில் வந்தனர். காரை கதிரவன் ஓட்டினார். கோயில்களில் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஊருக்கு புறப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் இடதுபுறம் ஓவர் டேக் செய்ததால் கதிரவன் காரை வலதுபுறம் திருப்ப முற்பட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மலையப்பநகர் பிரிவு பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் வலதுபுற சாலைக்கு சென்றது. அப்போது எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட கார் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கண்ணன், கார்முகில் மற்றும் லிங்கநேத்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த தமிழரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
இதில் படுகாயமடைந்த வேதவள்ளி, கதிரவன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், கிஷோர், சந்திரவதனன் ஆகியோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தகவலறிந்த பெரம்பலூர் எஸ்பி மணி, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry , Terrible collision of lorry with car, 4 killed including mother, son
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி