×

மெகா சலுகை!.. இந்தியாவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 35 டாலர் என மிக மலிவான விலையில் வழங்க ரஷ்யா முடிவு!!

டெல்லி: கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர் மிக மலிவான விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா முன்வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருப்பதால் ரஷ்யாவின் சலுகையை ஏற்க முன்வந்த இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியாவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர்களுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உள்ள நிலையில், ரஷ்யாவின் சலுகை எரிபொருள் விலையேற்றத்தை தணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆண்டிற்குள் 1.50 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க வேண்டும் என ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட உள்ளது என்று ஏற்கனவே கூறப்பட்டது. அதே போல் பால்டிக் கடல் வழிக்கு பதிலாக விளாடிவாஸ்டாக் துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எடுத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Russia ,India , India, barrel, crude oil, cheap, price, Russia
× RELATED சென்னையில் 2 நாள் ரஷ்யா உயர் கல்வி கண்காட்சி