×

இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி: மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படும் என நாசா தலைவர் தகவல்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பயிற்சி அளிக்க உள்ளது. விண்வெளி ஆய்வுகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளிக்க நாசா முன்வந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசா தலைவர் பில் நெல்சன், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற அமெரிக்கா விரும்புவதாக கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு தேவையான பயிற்சியை நாசா வழங்கும் என்று நெல்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் மேம்பட்ட பயிற்சி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நாசா தலைவர் பில் நெல்சன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 

The post இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி: மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படும் என நாசா தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : United States ,NASA ,Washington ,US ,International ,Space Exploration Center ,International Space Station ,India ,Dinakaran ,
× RELATED இந்தியா-பாக். இடையே...