×

உலக தண்ணீர் தினம் முதல்வர் டிவிட்

சென்னை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தை பாதுகாத்து - மேம்படுத்தி - தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம். மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது. நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திட செய்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World Water Day ,Dwight , World Water Day Chief Dwight
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்