×

தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்

*உலக தண்ணீர் தினத்தில் பேச்சு

ஊட்டி : இயற்கையின் கொடையான தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது இந்த நூற்றாண்டின் மிகப்ெபரும் அவலம் என ஊட்டியில் நடந்த உலக தண்ணீர் தினத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி ஒய்எம்சிஏ மற்றும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஒய்எம்சிஏ செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். எஸ்ஆர்விஎஸ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பங்கேற்புடன் நீர் சிக்கன பாதுகாப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

தண்ணீரும் உலகளாவிய சிக்கலும் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற வனச்சரகர் வித்யாதரன் பேசினார். மழைத்தரும் மரங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் பேசினார். நீர் மறுசுழற்சி மேலாண்மை குறித்து அருட்திரு ஆண்ட்ரூஸ் உரையாற்றினார். பள்ளி வளாகத்தில் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை தொடர்ந்து, சதுப்பு நில பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் திவ்யா, ஒய்எம்சிஏ தலைமையாசிரியர் எப்சிபா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதேபோல் குன்னூர் அருகே கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது. தலைமையாசியர் செலின் தலைமை வகிக்கிறார். ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான மனோகரன் பேசுகையில், ‘‘1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் கூடிய ஐநா சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாட்டு தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் 5ல் ஒரு குழந்தை தண்ணீர் இன்றி தவிக்கிறது.

6.85 கோடி பேர் குடிநீர் கிடைக்காததால் புலம் பெயர்ந்துள்ளனர். 2050ம் ஆண்டுக்குள் 570 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என்ற புள்ளி விவரங்கள் நம்மை எச்சரிப்பதாக உள்ளது.காடுகள் அழிப்பு, மக்கள் தொகை பெருக்கம், பொருள் நுகர்வு அதிகரிப்பு போன்ற காரணங்களினால் நீர் வளம் குறைந்து வருகிறது. இயற்கையின் கொடையான நீர் விலை கொடுத்து வாங்கும் அரிய பொருளாக மாறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம். எதிர் கால சந்ததியினர் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதைத்தான் நமது அரசியல் அமைப்பு சட்டமும் நீரை சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

The post தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம் appeared first on Dinakaran.

Tags : World Water Day Ooty ,World Water Day ,Ooty ,YMCA ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்