×

துணிக்கடையில் தீ விபத்து

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் முஜமில் (32) என்பவரது துணிக்கடையும் உள்ளது. முஜமில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் இந்த கடையில் இருந்து புகை வருவதாக ரோந்து போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராயபுரம், உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 8 தீயணைப்பு வீரர்கள் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர்.

இதனால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் கடையில் இருந்த துணிகள் எரிந்து சேதமானது. நள்ளிரவில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

The post துணிக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Muzamil ,Vannarpettai MC Road ,Mujamil ,Dinakaran ,
× RELATED சரக்கு ரயிலில் ஏறி போட்டோவுக்கு போஸ்...