×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவி திமுகவினர் போட்டியின்றி தேர்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுகவை சேர்ந்த அப்துல் ரஷீத் தலைவராகவும், குமரவேலு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த 13 பேரும், அதிமுகவை சேர்ந்த 2 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 3வது வார்டில் வெற்றி பெற்ற திமுக பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அப்துல் ரஷீத் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், சிறுபான்மை இனத்தை சேர்ந்த செஞ்சிஸ்கான் என்பவர் 45 வருடங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை ஊராட்சியாக இருந்தபோது தலைவராக இருந்துள்ளார்.  

அதன்பிறகு சிறுபான்மை இனத்தை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் 45 வருடங்களுக்கு பிறகு பேரூராட்சி தலைவரானது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த குமரவேலு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களை செயல் அலுவலர் மாலா தலைவர், துணைத்தலைவருக்கான இருக்கைகளில் அமர வைத்தனர்.இவர்களுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அபிராமி மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், சிறுபான்மை பிரிவு சம்சுதீன், முனிவேல், வக்கீல் சீனிவாசன், ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.




Tags : Uthukkottai Municipality ,DMK , In the municipality of Uthukottai The post of Chairman and Vice-Chairman is elected without contest by the DMK
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு