×

எஸ்.ஐ. தகாத வார்த்தைகளில் பேசியதால் 18 ஆண்டுகளாக நைட்டியுடன் வலம் வரும் ‘மேக்ஸி மாமா’ கேரளாவில் ருசிகரம்

திருவனந்தபுரம்: ேகரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் எகியா (70). இவர் அப்பகுதியில் சாலையோர கையேந்தி பவன் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கையேந்தி பவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தேநீர் அருந்த வந்திருந்தார். அப்போது எகியா வேட்டியை மடித்து கட்டியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்ெபக்டர் எகியாவை தகாத வார்த்ைதகள் பேசி தாக்கினார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த எகியா தனது வேட்டி, சட்ைடயை கழற்றி வீசிவிட்டு நைட்டி அணிந்து ெகாண்டார். இதையடுத்து கடந்த 18 ஆண்டுகளாக அவர் நைட்டியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் அவரை அப்பகுதியினர் ‘மேக்ஸி மாமா’ என அழைத்து வருகின்றனர். துபாயில் பணிபுரிந்த எகியா எந்தவித சம்பாத்தியமும் இன்றி ஊருக்கு திரும்பினார். பின்னர் சாலையோர கையேந்தி பவன் உணவகத்தை ெதாடங்கினார். இங்கு மதிய சாப்பாடு ₹10, சிக்கன் குழம்பு ₹40 மட்டுமே. மேலும் 10 பரோட்டாக்கள் வாங்கினால் 5 தோசைகளும், 5 சிக்கன் குழம்பு வாங்கினால் ஒரு சிக்கன் ஃபிரையும் இலவசம். தேனீர் ₹5 மட்டுமே. நீங்கள் சாவகாசமாக அமர்ந்து எவ்வளவு சாதம் வேண்டுமானாலும் சாப்பிட்டு ெகாள்ளலாம். அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் சாப்பாட்டை மீதி ைவத்தால் அபராதம் செலுத்த வேண்டும். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ₹500 மற்றும் ₹1,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து தடை செய்தார். அப்போது எகியா தன்னிடம் இருந்த ₹23 ஆயிரம் ேநாட்டுகளை மாற்ற வங்கிக்கு சென்றார். 2 நாட்கள் வரிசையில் காத்து நின்றும் மாற்ற முடியவில்லை. ேமலும் வரிசையில் காத்து நின்ற அவர் மயங்கி விழுந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எகியா ₹23 ஆயிரம் நோட்டுகளையும் எரித்து போராட்டம் நடத்தினார். ேமலும் மீசையை மழித்தும், தலையில் பாதி முடியை மொட்டையடித்தும் கொண்டார். மோடி ராஜினாமா செய்யும் வரை மீசை வைப்பதில்லை எனவும் சபதம் மேற்கொண்டுள்ளார். …

The post எஸ்.ஐ. தகாத வார்த்தைகளில் பேசியதால் 18 ஆண்டுகளாக நைட்டியுடன் வலம் வரும் ‘மேக்ஸி மாமா’ கேரளாவில் ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : S. GI ,Kerala ,Thiruvananthapuram ,Ekiya ,Kollam ,Gaunthi Bhavan ,GI ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்