×

பிரதமர் மோடி பதவி ஏற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் வலம் வந்த மர்மவிலங்கு: சிறுத்தையா? பூனையா? வீடியோ இணையதளத்தில் வைரல்

புதுடெல்லி: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவின் போது ஜனாதிபதி மாளிகையில் மர்ம விலங்கு வலம் வந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டது. இந்த விழாவில் வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் பிற உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட9,000 விருந்தினர்கள் கலந்துகொண்டார். ஆனால் சமூக வலைதளங்களில், அழைக்கப்படாத விருந்தினர் ஒருவர் கேமராவில் சிக்கியிருப்பது வைரலாகி வருகிறது.

பா.ஜ எம்பி துர்கா தாஸ் உகே, பதவியேற்பு நடைமுறையை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பேசிவிட்டு புறப்பட்டார். அப்போதுபோது, அவரது ​​பின்னணியில் ஜனாதிபதி மாளிகையில் பூனை போன்ற விலங்கு கடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது சிறுத்தையா? சாதாரண பூனையா? அல்லது நாயா? ஜனாதிபதி மாளிகையில் எந்த விலங்கு இப்படி சாதாரணமாக உலா வந்தது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வைரலாகி வருகிறது.

The post பிரதமர் மோடி பதவி ஏற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் வலம் வந்த மர்மவிலங்கு: சிறுத்தையா? பூனையா? வீடியோ இணையதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : palace ,Modi ,New Delhi ,President's ,House ,
× RELATED மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி...