×

சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு மாசி மாதம் மகம் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

நேற்றுமுன்தினம் மகம் நாள் என்பதால் ஏராளமான பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர். இதில் நடிகை நயன்தாரா, தனது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.



Tags : Sami ,Nayanthara ,Chottanikkarai Bhagavathyamman temple , Sami darshan with Nayantara's boyfriend
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி