×

நேருவை பற்றி பேசுவதற்கு பாஜவினருக்கு எந்தவித தகுதியும் கிடையாது: சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி

சென்னை: பாஜவினருக்கு நேருவை பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் கிடையாது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமை தாங்கினார். இதில்  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாவட்ட தலைவர் அடையாறு துரை, மாநிலச் செயலாளர் கடல் தமிழ்வாணன், முன்னாள் எம்எல்ஏ  அருள் அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்

தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை அளித்த பேட்டி: காங்கிரஸ் மட்டுமே மீனவர்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது 69 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜவஹர்லால் நேரு இல்லை என்றால் நவீன இந்தியா கிடையாது. அவர் கொண்டு வந்த திட்டங்கள் தான் நவரத்தினங்கள் ஆக இருக்கக்கூடிய தொழிற்சாலைகள். நேரு சேர்த்து வைத்த சொத்துக்களை விற்று வரும் பாஜவினருக்கு, அவரை பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pajavinar ,Assembly Congress , Nehru, BJP, Congress party, leader
× RELATED காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, மகள் பாஜகவில் ஐக்கியம்: அரியானாவில் பரபரப்பு