×

கேரளாவில் பாஜவினர் கொலைக்கு முதல்வர் பினராயிதான் பொறுப்பு: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: சிவசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக டிஜிபி நேர்மையாக, நடுநிலையாக செயல்பட வேண்டும். அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. சமூக வளைதளத்தில் ஏராளமானோர் அவதூறு பதிவுகளை செய்கின்றனர். ஆனால், பாஜவினரை மட்டும் போலீசார் கைது செய்கின்றனர். காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை என்பது டிஜிபிகே தெரியும். மாங்காடு மாணவி தற்கொலை கடிதத்தில் கருவறையும், கல்லறையும் தான் பாதுகாப்பு என்று எழுதி இருக்கிறார். இது மனவேதனையை அளிக்கிறது. கேரளாவில் 266 பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் இதற்கு முழு பொறுப்பு. முதல்வரும், அமைச்சர்களும் பிரதமரின் வருகையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு திட்டங்களை பயன்படுத்தி தமிழகம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முதல்வர் வேலை செய்வார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Pinarayeit ,Pajavinar ,Kerala ,Paja ,Anamalai , Chief Minister Binarai is responsible for the killing of BJP workers in Kerala: BJP leader Annamalai interview
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!