×

2002 முதல் உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க தலைவர் சண்முகராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலை துறையில்  பணி நீக்க காலத்தில் உயிரிழந்த 94 சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு அதிமுக அரசு வேலை வழங்காமல் சென்றது. அடுத்து வந்த திமுக அரசு 2006 ஆகஸ்ட் 21ம் தேதி அரசாணை பிறப்பித்து 94 குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட உத்தரவிட்டது. ஆனாலும், அரசாணையின்படி பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கப்படவில்லை. இதற்கிடையே 2006ம் ஆண்டும் நடப்பு ஆண்டு, நடப்பு தேதி வரையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாரிசு வேலை வழங்குவதற்கான ஆவணங்களும், பணி வழங்கும் பொறுப்பும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் தற்போது வரை கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் எண்ணற்ற சாலை பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். எனவே, குடும்ப தலைவரை இழந்து பல நெடுங்காலமாக வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பங்கள் மீது தமிழக முதல்வர், வாரிசு பணி வழங்குவதற்கு தடையாக இருக்கும் விதிமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ஒரே உத்தரவின் மூலம் நெடுஞ்சாலைத்துறையில் வாரிசு வேலைக்கு காத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையிலான வாரிசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post 2002 முதல் உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Tamil Nadu Highway Department Road Workers Union ,President ,Shanmugaraja ,M.K.Stalin ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு