மசாலா பாஸ்தா

செய்முறை:

கொதிக்கும் நீரில் பாஸ்தாவை போட்டு 20 நிமிடம் வேக வைக்கவும். இத்துடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின் வடிகட்டி குளிர்ந்த நீரில் போடவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும்.மசாலா பக்குவம் வந்ததும், பாஸ்தாவையும் சேர்த்து கிளறவும். பின் அதனை மூடி 20 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறவும். வெந்தவுடன் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த மசாலா பாஸ்தா ரெடி.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் பாஸ்ட் புட்...