×

5 மாநில அகதிகளுக்கு குடியுரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற கடந்த 1995 மற்றும் 2009ல் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019ல் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்தன. கொரோனா சூழல் சீரானதும் இச்சட்டத்திற்கான விதிகள் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.இந்நிலையில், 2009 குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில், குஜராத் சட்டீஸ்கர், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது….

The post 5 மாநில அகதிகளுக்கு குடியுரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Hindus ,Sikhs ,Buddhists ,Jains ,Parsis ,Christians ,Afghanistan ,Bangladesh ,Pakistan ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு