×

பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்

புதுடெல்லி: டிவி சீரியல் நடிகரான குருசரண் மாயமாகியுள்ளது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரபல டிவி சீரியல் நடிகர் குருசரண். இவர் டாராக் மெக்தா கா ஓல்டா சஸ்மா என்ற பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி மும்பை செல்வதற்காக டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் அவர் மும்பை சென்றடையவில்லை மற்றும் வீட்டிற்கும் திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடைசியாக குருசரண் விமான நிலையத்தில் நின்றிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

The post பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,New Delhi ,Gurucharan ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...