×

9.48 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தடைந்தது

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாட்டிற்கு மேலும் 9.48 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இவை, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டது. அந்த 9.48 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 79 பார்சல்கள், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று பகல் 12.30  மணிக்கு புனேவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தன. விமான நிலைய அதிகாரிகள், தடுப்பூசி பார்சல்களை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags : Govshield ,Chennai , 9.48 lakh Govshield arrived in Chennai
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...