×

ராம்தேவ் தயாரித்தது 1 லட்சம் நோயாளிகளுக்கு ‘கொரோனில்’ மருந்து கிட்: அரியானா மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்: சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி ஆயுர்வேத’ நிறுவனம் ‘கொரோனில்’ எனும் ஆயுர்வேத மருந்தை தயாரித்துள்ளது. முதலில் இந்த மருந்து கொரோனா தொற்றை குணப்படுத்தும் என்று கூறி அறிமுகம் செய்த பதஞ்சலி நிறுவனம், அது கடும் சர்ச்சையான பின்னர் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்கான மருந்து என்று கூறியது. இந்நிலையில், அரியானாவில் 1 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு கொரோனில் மருந்து கிட் தர இருப்பதாக அம்மாநில சுகாதார துறை அனில் விஜ் தெரிவித்துள்ளார்.  இந்த மருந்தை வழங்குவதற்கான பாதி செலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அலோபதி மருத்துவ முறை காலாவதியானது மற்றும் அறிவிலித்தனமானது என்று ராம்தேவ் கூறி சர்ச்சையாக அக்கருத்தை அவர் திரும்ப பெற்றிருக்கும் நிலையில், அவரது மருந்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. …

The post ராம்தேவ் தயாரித்தது 1 லட்சம் நோயாளிகளுக்கு ‘கொரோனில்’ மருந்து கிட்: அரியானா மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramdev ,Ariana State Govt ,Chandigarh ,Pastor ,Baba Ramdev ,Ayurveda ,Ariana state government ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா?