ஆம்பூர் அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 குழந்தை பலி: விஷம் குடித்து தந்தை சாவு: தாய்க்கு தீவிர சிகிச்சை

ஆம்பூர்:   கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(45), டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (40). இவர்களின் மகன் ஜஸ்வந்த்(9), 4ம் வகுப்பும், மகள் ஹரிபிரிதா(7), 2ம் வகுப்பும் படித்து வந்தனர். மீனாட்சி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார்.  நேற்று முன்தினம் லோகேஷ்வரன், குடும்பத்தினரை அருகிலுள்ள கைலாசகிரி மலைக்கோயிலுக்கு அழைத்து சென்றார்.

அங்கு கால் தவறி ஹரிபிரிதா குளத்தில் விழுந்தாள். அவளை மீட்க ஜஸ்வந்த்தும் குளத்தில் குதித்தான்.  இருவரும்  நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் மனமுடைந்த லோகேஸ்வரன், மீனாட்சி ஆகியோர் நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் குளிர்பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்து மயங்கினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லோகேஸ்வரன் இறந்தார். மீனாட்சி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

More