×

காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு 181 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்தாண்டு டெல்லியை மிஞ்சும் வகையில் சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தூய்மை காற்று திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மொத்தம் 42 நகரங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதல் கட்டமாக ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 3 ஆண்டுகளில், 30 சதவீத காற்று மாசுவை கட்டுப்படுத்த முடியும்,’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Union Government , Air Pollution, United States, Allocation
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...