வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்துக்கான இடம்; அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கொட்டகை அகற்றம்: ஆம்பூர் அருகே அதிகாரிகள் அதிரடி

ஆம்பூர்: ஆம்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ஒலை குடிசையை  தாசில்தார் நேற்று அகற்றினார். ஆம்பூர் தாலுகா வெங்கிளி கிராமத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்ட அரசு நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த இடத்தை ஆக்கிரமித்து நேற்று அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் ஒலை குடிசை அமைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி விஏஓ ரஞ்சித் உடனடியாக ஆம்பூர் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் அந்த கொட்டகையை அகற்றினர். பின்னர், தாசில்தார் உத்தரவின் பேரில் விஏஓ ரஞ்சித் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சந்திரகுமார் மீது நடவடிக்கை கோரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More