பாதாம் அல்வா

செய்முறை

பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து தோலை உரித்து கொஞ்சம் பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீரும், சர்க்கரையும் சேர்த்து கொதிக்க வைத்து லேசாக பிசுபிசு பதம் வரும்போதே பாதாம் விழுதைப் போட்டு நன்றாகக் கிளறிக் கொள்ளவும். பாதாம் விழுது வெந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறி குங்குமப்பூ தூவி இறக்கி வைக்கவும். கலர் வேண்டுமானால் சிறிது கேசரி கலர் கலந்து கொள்ளலாம். அல்வாவை ஓவராகக் கிளறி விட்டால் கெட்டியாகி விடும். சிறிது பால் விட்டுக் கிளறினால் பழையபடி தளர அல்வா பதம் வந்துவிடும்.

Tags :
× RELATED பிளாக் பாரஸ்ட் கப் கேக்