×

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலியாக கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..!!

கோவை: கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலியாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் வாளையாறு எல்லையில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து மாணவர்கள் வருகையால் வாளையாறு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள்:

* கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள முக்கிய கடைவீதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

* சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து நகை கடை, துணிக்கடைகள், மால்கள், பூங்காக்கள் இயங்க தடை.

* காலை 6 முதல் மாலை 6 மணி வரை உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.

* உணவகங்களில் மாலை 6 மணிக்கு மேல் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம்  உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

* விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.


Tags : Kerala ,Coimbatore , Kerala, Corona, Coimbatore, Additional control
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...