×

ஒரு வாரம் முன்னதாக செப். 13ம் தேதியுடன் பேரவை கூட்டம் முடிகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14ம் தேதி, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது வருகிற வியாழன் வரை விவாதம் நடத்தப்பட்டு, வருகிற 23ம் தேதி (திங்கள்) முதல் மானிய கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்றும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 21ம் தேதி (29 நாட்கள்) வரை நடைபெறும் என்றும் சபாநாயகர் மு.அப்பாவு கடந்த வாரம் கூறி இருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 13ம் தேதி வரை மட்டுமே நடத்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முன்னதாக, நேற்று மதியம் 1 மணியளவில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்ள சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இன்று 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீது 3வது நாளாக பொது விவாதம்.
நாளை    பட்ஜெட் மீது பொது விவாதம் மற்றும் பதிலுரை
மானிய கோரிக்கை மீது விவாதமும் வாக்கெடுப்பும்

23ம் தேதி        நீர்வளத்துறை
24ம் தேதி        நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
25ம் தேதி        உணவு மற்றும் கூட்டுறவு
26ம் தேதி        உயர் கல்வி, பள்ளி கல்வி துறை
27ம் தேதி        நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை
28ம் தேதி        வேளாண்மை துறை, கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகள்
31ம் தேதி        வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
செப்.1ம் தேதி    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி துறை, சமூக நலத்துறை
2ம் தேதி        குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, மக்கள் நல்வாழ்வு துறை
3ம் தேதி        வனத்துறை, சுற்றுச்சூழல், விளையாட்டு துறை
4ம் தேதி        இந்து சமய அறநிலையத்துறை, தொழிலாளர் நலத்துறை, சுற்றுலா துறை
6ம் தேதி        செய்தித்துறை, கைத்தறி துறை, கதர்துறை, வணிக வரித்துறை, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு
7ம் தேதி        நீதி நிர்வாகம், சிறைத்துறை, சட்டத்துறை, எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தொழிலாளர் நலத்துறை
8ம் தேதி        பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
9ம் தேதி        போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை
10ம் தேதி        விநாயகர் சதுர்த்தி - அரசு விடுமுறை
11ம் தேதி        காவல் மற்றும் தீயணைப்பு துறை
13ம் தேதி        திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, நிதித்துறை, அரசியல் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசியல் அலுவல்கள்.

ஆகஸ்ட் 20 (மொகரம்), 21, 22, 29, 30 (கிருஷ்ண ஜெயந்தி), செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள்

Tags : House ,Appavu , Assembly Meeting, Speaker, appavu
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்