×

ராதாபுரம் தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு..!!

நெல்லை: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு வள்ளியூர் ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அந்த ஊராட்சியில் காமராஜ் நகர் அருகே 121 பிளாட்கள் போடப்பட்டு 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

இங்கு தனியார் பிளாட் போடுவது போன்ற நிலங்கள் சமன்படுத்தப்பட்டு எல்லை கற்கள் போடப்பட்டு சாலைகள், குடிநீர் வசதிகள் செய்ய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் முதல் முறையாக பயனாளிகளுக்கு அவரவர் இலவச பட்டா, மனை இடத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதில் 14 பேருக்கு உடனடியாக இலவச வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனிடையே சபாநாயகர் அப்பாவு கூறுகையில், முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட 51 பேரில் 10 சமூகத்தை சார்ந்தவர்கள் இருப்பதாகவும், இது பெரியார் சமத்துவபுரம் போலவே உள்ளதாகவும் தெரிவித்தார்.


Tags : Speaker of the Assembly ,Radhapura , Radhapuram constituency, free housing bond, Speaker Appavu
× RELATED நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2...