×

நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டபள்ளி அருகில் நேற்று (22.05.2024) அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமாரி (வயது 42) க/பெ.விஜயகுமார் மற்றும் முத்துச்செல்வி (வயது 30) த/பெ.முருகேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

The post நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,Nellai ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Tirunelveli district ,Radhapura ,Thiruvampalapuram village ,Radhapura Circle ,Garden School ,Chief Minister ,MLA ,Nella ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...