×

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை புதுப்புத்தூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயப்பிரகாஷ் (29), காளிமுத்து (29). இவர்கள் நேற்று, தங்களது உறவினர்களை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்திருந்தனர். பின்னர் இருவரும் காரில் கொடைக்கானல் ஏரிப்பகுதிக்கு சென்றனர். காரை ஜெயப்பிரகாஷ் ஓட்டி வந்தார்.

அப்போது அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், ஒரு திருப்பத்தில் டூவீலரில் சென்ற சிறு வியாபாரி பாண்டியம்மாள் என்பவர் மீது மோதியது. தொடர்ந்து தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரிக்குள் பாய்ந்த கார், தண்ணீரில் மூழ்க துவங்கியது. தகவலறிந்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் வந்து காரில் சிக்கி தவித்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்குள்ளிருந்து கார் மீட்கப்பட்டது. படுகாயமடைந்த பாண்டியம்மாள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார் appeared first on Dinakaran.

Tags : Lake Kodaikanal ,Godaikanal ,Jayaprakash ,Kalimuthu ,Godaikanal Melmalai ,Puduputtur ,Mlaikraam, Dindigul District ,Godaikanal Melmalai Puduputtur ,Godaikanal Government Hospital ,Bodaykanal Lake ,Kodiakanal Lake ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...