×

குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை


குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மங்கைநல்லூர் ஜெயராஜ் நகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(30). ஓட்டல் தொழிலாளியான இவருக்கும், காரைக்கால் மாவட்டம் நல்லெழுந்தூர் மாரிமுத்து மகள் சங்கீதா(25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 9 மாதத்தில் ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விக்னேஷுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இதில் சங்கீதா எவ்வளவோ கணவனை திருத்தப்பார்த்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்த சங்கீதா, நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்கில் தொங்கினார்.சத்தம் கேட்டு அருகில் குடியிருந்து வருபவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

The post குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vishwanathan Mahan Vignesh ,Mayiladudura District Tarangampadi ,Taluga Mangainallur Jayaraj ,Sangeetha ,Karaikal District ,Nallendoor Marimuthu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்