×

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி ஒரேநாளில் 7 குழந்தைகள் உட்பட 18பேர் பலி!: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மின்னல் தாக்கி ஒரேநாளில் 7 குழந்தைகள் உட்பட 18பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தலைநகர்  ஜெய்பூரை அடுத்துள்ள ஆம்பூர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூடி இருந்த போது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன. இதேபோன்று கோடா, ஜலாபர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.

பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மழை காலத்தில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் உத்தர பிரதேசத்தில் 2 சிறுவா்கள் உள்பட 10 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

இவர்கள் தவிர உத்தரகாண்டில் மழைக்கு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் மட்டும் பருவமழை தொடங்குவது தாமதமாவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Attacking ,Rajasthan , Rajasthan, lightning, 18 killed, Rs 5 lakh compensation
× RELATED காஷ்மீரில் காவல் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவம் மீது வழக்கு